ஓவியாவிற்கு குரல் கொடுத்த சிம்பு

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் தொடங்கியது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளர்களாக நீக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 10 போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், பரணியை வெளியேற்ற தூண்டியது போன்று தற்போது ‘பிக்பாஸ்’ குடும்பத்தினர் அடுத்த டார்கெட்டாக ஓவியா குறி வைத்துள்ளனர். ஓவியா இங்கே இருந்தால் நாங்கள் வீட்டில் […]

Continue Reading

⁠⁠⁠தம்பி ஜெயக்குமார், எலும்பு வல்லுநர் எச்.ராஜா – வெளுத்து வாங்கும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் குறித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும், பாஜகவினரும் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர. இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டரில் எழுதியிருந்த கவிதையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ என்று சொல்லியிருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவையிட்டிருக்கிறார் கமல். அதில், “ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் […]

Continue Reading

மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி […]

Continue Reading

என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது : கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:- என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை […]

Continue Reading

ரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்

மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் […]

Continue Reading

ஒரு வீடு, 15 நபர்கள், 100 நாட்கள்

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். […]

Continue Reading

அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாக இருக்கிறது: இரங்கல் கூட்டத்தில் கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது கமல் பேசும்போது, என்னுடைய […]

Continue Reading

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, […]

Continue Reading

கமல் ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல் ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் காலமானார். லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் சந்திரஹாசன் காலமானார். லண்டனில் மாரடைப்பால் காலமான சந்திரஹாசனுக்கு வயது 82 ஆகும். சந்திரஹாசன் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் பார்ட்னர் ஆவார்.

Continue Reading