மீனவர்கள் நலனில் அக்கறை காட்டும் இசையமைப்பாளர்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார். எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது, ‘தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் […]

Continue Reading

தானாக சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள் : இலியானா

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார். ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா கூறும் போது, “ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பேன். அந்த கால கட்டத்தில் ஒரு வகையான மனச்சிதைவு இருந்திருக்கிறது. அதுபற்றி அப்போது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். தற்கொலை செய்தால் பிரச்சினைகள் […]

Continue Reading

ரசிகர்களின் கேள்விக்கு நஸ்ரியாவின் ‘நச்’ பதில்

தமிழில், நேரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகையான நஸ்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், ராஜா ராணி, திருமணம் எனும் நிஹ்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. […]

Continue Reading

பிறந்த நாளில் பிறக்கும் கமலின் புதிய கட்சி?

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதலும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்து வந்த கமல்ஹாசனும், “அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்.” என்றார். அதனைத் […]

Continue Reading

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ரிச்சாவின் சத்தியம்

மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா. பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பு எம் பி ஏ படிப்பதற்காக ரிச்சா அமெரிக்கா சென்றார். ரசிகர்கள் டுவிட்டரில் அவரை மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது படிப்பை முடித்துவிட்டார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு […]

Continue Reading