ஆர் கே நகர் வேட்பாளர் இறுதிப் பட்டியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் உள்ளிட்ட 145 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் நடிகர் விஷால், […]

Continue Reading

சுயேட்சை வேட்பாளராக விஷால்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை […]

Continue Reading

தினகரன் அணி ஆர் கே நகர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு […]

Continue Reading

ஆர் கே நகர் தேர்தல் குறித்து தினகரன் ஆலோசனை

அதிமுக கட்சி, பெயர், சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி பயன்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து டிடிவி தினகரன் அணி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்திவருகிறது. இதற்கிடையே ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறுவதையொட்டியும் டிடிவி தினகரன் அணி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நெருக்கடியான இந்த கால கட்டத்தை சமாளிப்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வது […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் கருத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

கடந்த 2014 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் இது குறித்து மேலும் சில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் […]

Continue Reading

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி, சீமான் என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாஜக அணி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை சந்தித்து, ஆசி பெற்றார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் தன்னை […]

Continue Reading