பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்து

pr இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புனிதமான இந்த நாள் சமூகத்தில் அமைதி, சகோதரத்துவத்தை மேலும் பரவச்செய்யட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் […]

Continue Reading