விஜய் ரசிகர்களுக்கு எனது செங்கோலை தீபாவளி பரிசாக தருகிறேன் – வருண் ராஜேந்திரன்..!!

  “சர்க்கார்” படத்தின் கதை விவகாரத்தில் நேற்று செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருண் ராஜேந்திரன், “டைட்டிலில் எனது பெயரை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அங்கீகாரம் தான் எனக்கு கிடைத்த இழப்பீடு. நான் படத்தை வெளியிட தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுக்கவில்லை. விஜய்யின் […]

Continue Reading

‘சர்கார்’ கதையைக் கூறிய கே.பாக்யராஜ்: மன்னிப்பு கேட்ட சாந்தனு..!!

கே.பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில் “சர்கார்” கதையைக் கூறியதற்கு, சாந்தனு மன்னிப்புக் கோரியிருக்கிறார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ’செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். இதற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்திருக்கிறார். ‘சர்கார்’ படத்தில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகனும் […]

Continue Reading

தளபதி 62 படக்குழுவின் அறிவிப்பு விரைவில்…

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் “விஜய் 62” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், நடிகை வரலட்சுமியும் நேற்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் […]

Continue Reading
அஜித்

அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க என்ன காரணம்?

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித் – முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது. ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான். இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் […]

Continue Reading

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடல்களை பாடியிருப்பவர்கள் வெகு சில ஹீரோக்கள் தான். அவர்களில் முக்கியமானர்கள் நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தான். இவர்களில் நடிகர் விஜய் தனது ஆரம்ப கால கட்டங்களில் வெளியான எல்லா படங்களிலுமே ஒரு பாடலை பாடி விடுவார். ஒரு கட்டத்தில் பின்னணி பாடுவதை நிருத்திக் கொண்டார். சில படங்களுக்குப் பிறகு “சச்சின்” படத்தில் ஒரு பாடலை பாடினார். அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எந்த […]

Continue Reading

விஜய்க்கு அடிக்க சொல்லித் தரப்போகிறவர் யார் தெரியுமா?

விஜய் படம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது டான்ஸ் என்றால், இரண்டாவதாக நினைவிற்கு வருவது ஆக்‌ஷன் காட்சிகள். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் “தளபதி62” படத்திற்கு இப்போதிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி தினம் ஒரு தகவல் படத்தைப் பற்றி கசிந்த வண்ணம் இருக்கிறது. இன்று வந்திருக்கும் தகவலின்படி, ஸ்டண்ட் மாஸ்டராக “அனல்”அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இவர் ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான “கத்தி” படத்தில் பணியாற்றியிருந்தார். மேலும் விஜய் […]

Continue Reading

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்‌ஷன் கிங்” டீசர்!

வேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]

Continue Reading

“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!

“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு […]

Continue Reading

பற்றும் வதந்”தீ”.. பதறும் கோலிவுட்..

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, வசூலில் தாறுமாறாக சாதனைகளை செய்து வரும் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிக்கப் போகும் “விஜய்62” படம் குறித்து பல தகவல்கள் அதற்குள் கசியத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே, விஜய்62 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தபிறகும் சுற்றும் இதுபோன்ற செய்திகள் :- வதந்தி நம்பர்1: ”ஸ்பைடர்” படம் சரியாக போகாத காரணத்தினால் ஏ.ஆர்.முருகதாஸை மாற்றி விடலாம் என்று விஜய் தரப்பும், தயாரிப்பு […]

Continue Reading

புதுமாப்பிள்ளை போல உணர்வதாக சொன்ன ஏ ஆர் முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஸ்பைடர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதாலும், மகேஷ் பாபு நேரடியாக தமிழில் நடிக்கும் படம் என்பதாலும் இத்திரைப்படத்தின் […]

Continue Reading