விருது பட்டியலிலேயே இடம் பெறாத முன்னனி நடிகர்களின் படங்கள்

தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது. 6 ஆண்டுக்கான மானியம் பெறும் மற்றும் விருது பெறும் படங்களை ஒட்டு மொத்தமாக நேற்று தமிழக அரசு வெளியிட்டது. வழக்கமாக ஒன்றிரண்டு ஆண்டுக்கான விருது மட்டும் நிலுவையில் இருக்கும். ஆனால் […]

Continue Reading

வெளியான தகவலால் கடுப்பான காஜல்

தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால். இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியது. இதை மறுத்துள்ள காஜல் அகர்வால், […]

Continue Reading

விவேகம் பற்றிய விடையில்லா கேள்விகள்

அஜீத்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த படத்தை சிவா இயக்கியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்போது, இதை இயக்குனர் மறுத்துள்ளார். இவருடைய பாத்திரம் என்ன என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. அஜீத் எதிர் மறை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் படமான இந்த படத்தில் நடித்தது பற்றி கூறியுள்ள விவேக் […]

Continue Reading

அஜித்துக்கு அக்‌ஷராஹாசன் வில்லன்?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தையும் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார் சிவா. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில் விவேக் ஓபராய்தான் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இதனை மறுத்து படக்குழுவினரும் எந்த செய்தியும் வெளியிடவில்லை. தற்போது […]

Continue Reading

சர்வைவா முடிச்சிட்டு செர்பியா போயாச்சு

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஹிப் ஹாப் பாடகர் யோகி-பி பாடிய ‘Surviva’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத பட்சத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ‘விவேகம்’ படக்குழு செர்பியா சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் […]

Continue Reading

அஜித்தின் சாதனைகள் சொல்லும் பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் […]

Continue Reading

பிளாஸ்டிக் முட்டையால் விபரீதம்? : சூர்யா, அஜித்துக்கு மயக்கம்

திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆங்கில படம் ஒன்று திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்க்க திருவள்ளூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சூர்யா(21), அஜீத்(21), சிரஞ்சீவி(20) ஆகியோர் சென்றனர். படத்தின் இடைவேளை நேரத்தின் போது அங்குள்ள கேன்டீனில் 3 பேரும் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டனர். அதனை சாப்பிடும் போது பிளாஸ்டிக்கை சாப்பிடுவது போல் கடினமாக இருப்பதாக கேன்டீனில் வேலை செய்பவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை எனக் கூறவே சூர்யா, அஜித் ஆகிய 2 பேர் […]

Continue Reading

கவனம் ஈர்க்கும் `விவேகம்’ டீசர்

சிறுத்தை சிவா – தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்’ படத்தின் டீசர், எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு 12.01 மணிக்கு யூ டியூப்பில் […]

Continue Reading