Tag: விஜய் சேதுபதி
என் வாழ்வின் முக்கியமான படம்!
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]
Continue Readingவிஜய் சேதுபதிக்கு ஒரு “ மெர்சல் ஹிட்” பார்சல்!
விஜய் சேதுபதி உண்மையிலேயே தமிழ் சினிமாவின் ஆச்சர்ய பேக்கேஜ். ஆல் செண்டர்களிலுமே கெத்து காட்டும் முரட்டுத்தனமான பெர்ஃபார்மர். கதைகளைத் தேர்ந்தெடுப்பதை விட வெயிட்டான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அத்தனையிலுமே தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருப்பவர். இவை மட்டுமில்லாமல் தேவையில்லாமல் எந்த சர்ச்சையிலுமே சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் நடைபோடுபவர். ஆனால் ஒற்றை வசனத்தைக் கொண்டு விஜய் சேதுபதியை நோக்கி வசவுக்கணைகளை வீச ஆரம்பித்திருக்கிறார் சர்ச்சை புகழ் எச்.ராஜா. விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பார்த்து […]
Continue Readingவிரைவில் வரவிருக்கிறது மேற்குத் தொடர்ச்சிமலை
இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் லெனின்பாரதி இயக்கத்தில் உருவாகி பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் விருதுகளையும் சர்வதேச திரை ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ திரைப்படம் ‘சினிமா சிட்டி’ நிறுவனம் மூலமாக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஆண்டனி நடிகை காயத்திரி கிருஷ்ணாவுடன் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் கதைக் களத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Readingநிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்!
19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. கோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”. இதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் […]
Continue Readingமீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி
கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]
Continue Readingடாக்டர் அனிதாவிற்காக நடிகர் செய்த மகத்தான காரியம்!
தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட இளம் நடிகர்களில் எதையுமே தனித்துவமாக செய்யக் கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகட்டும், பொது விசயங்களுக்கு கருத்து தெரிவிப்பதாகட்டும் எதிலுமே துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட விஜய் சேதுபதி தற்போது, நீட் தேர்வினால் மரணமடைந்த மாணவி அனிதாவின் நினைவாக செய்திருக்கும் காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது சம்பந்தமாக விஜய் சேதுபதி வெளியுட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தேன். […]
Continue Readingஔரங்கசீப் கோட்டையில் த்ரிஷா
நடிகை த்ரிஷா, 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மேலும் `மோகினி’, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ள த்ரிஷா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `1818′ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்திலும், […]
Continue Reading“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!
“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு […]
Continue Reading
