முழுக்க முழுக்க ‘தல’ ரசிகர்களுக்காக !

J.K.பிலிம் புரொடக்சன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். “பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு […]

Continue Reading

தானாக சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள் : இலியானா

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார். ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா கூறும் போது, “ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பேன். அந்த கால கட்டத்தில் ஒரு வகையான மனச்சிதைவு இருந்திருக்கிறது. அதுபற்றி அப்போது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். தற்கொலை செய்தால் பிரச்சினைகள் […]

Continue Reading

ரசிகர்களின் கேள்விக்கு நஸ்ரியாவின் ‘நச்’ பதில்

தமிழில், நேரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகையான நஸ்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், ராஜா ராணி, திருமணம் எனும் நிஹ்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. […]

Continue Reading

பிறந்த நாளில் பிறக்கும் கமலின் புதிய கட்சி?

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதலும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்து வந்த கமல்ஹாசனும், “அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்.” என்றார். அதனைத் […]

Continue Reading

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ரிச்சாவின் சத்தியம்

மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா. பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பு எம் பி ஏ படிப்பதற்காக ரிச்சா அமெரிக்கா சென்றார். ரசிகர்கள் டுவிட்டரில் அவரை மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது படிப்பை முடித்துவிட்டார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு […]

Continue Reading

கிரிக்கெட் வீரரின் ரசிகராக விக்ரம்பிரபு

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனத் தயாரிப்பாளர் டி சிவகுமார், அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி சிவகுமார் நடிக்கிறார். இப்படத்திற்கு […]

Continue Reading

ரசிகர்களுக்கு ஜூத்வாவில் டாப்சியின் விருந்து

டாப்சி, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தி படம் ‘ஜூத்வா-2’. இதில் ரம்பா வேடத்தில் டாப்சி கவர்ச்சியாக நடித்திருக்கிறார். “‘ஜூத்வா-2’ நகைச்சுவைப் படம். இதில் ஏராளமான நடனக் காட்சிகள் உள்ளன. இது போல நிறைய கவர்ச்சிக் காட்சிகளும் உள்ளன. தென் மாநிலப் படங்களில் நான் கவர்ச்சியான பெண்ணாக நடிக்கத் தொடங்கினேன். இந்திப் பட உலகில் 3 ஆண்டுகளாக என் படங்களை ரசிகர்கள் ரசித்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் […]

Continue Reading