ஊடகங்களுக்கு கடிதம் எழுதிய பாடலாசிரியர்

பாடலாசிரியரான மதன் கார்க்கி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு, உங்களுக்கு நன்றி சொல்ல எழுதுகிறேன். பாடல் வெளியீட்டு விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் உங்களில் பலரை நேரில் காணும்போதும் புன்னகை பரிமாற்ற மட்டுமே நேரமிருக்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்களுக்கு நன்றி சொல்லாமல் மனம் நிறைவதில்லை. இந்த ஆண்டு 36 படங்களில் பணிபுரிந்து 98 பாடல்கள் எழுதியுள்ளேன். டூபாடூவின் திரைப்படங்களுக்கான பாடல் வங்கிக்காக பல்வேறு இசைக்கலைஞர்களுடன் இணைந்து 58 பாடல்கள் […]

Continue Reading

கபிலன் வைரமுத்துவைப் பாராட்டிய பாடலாசிரியர்

அருள் சூரியக்கண்ணு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”. “தட்றோம் தூக்றோம்” படக்குழுவினர் டீமானிடைசேஸன் ஆந்தம் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைந்ததை ஒட்டி இந்த வருட நவம்பர் 8ம் நாளை டிமானிடைசேஸன் தோல்வி என்று கருப்பு தினமாக ஒரு சாராரும், வெற்றி என்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி இன்னொரு சாராரும் அனுசரித்திருக்கிறார்கள். எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். […]

Continue Reading

புது வரலாறாக ‘மெட்ராஸ்’ கவிஞர் உமாதேவி!

தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா […]

Continue Reading

சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் பாட்டு பரிந்துரை!

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம் ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா… (அருண்ராஜா காமராஜ் – கபாலி) இது கதையா… […]

Continue Reading