தானா சேர்ந்த கூட்டணி!

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]

Continue Reading

ஜி.எஸ்.டி.யால் ரிலீஸ் இல்லை ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குளோ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியிடப்போவதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்திற்கான புரோமோஷன்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, பலமுறை இப்படம் வெளியாகும் […]

Continue Reading

`நெஞ்சம் மறப்பதில்லை’ பட ரிலீஸ் அறிவிப்பு

தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் […]

Continue Reading