தீபாவளிக்கு வந்தே தீருவோம் – “மெர்சல்” தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி!

என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு வெளியிடுவோம் என்று ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ”மெர்சல்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற குழப்பம் இன்னும்கூடத் தீர்ந்தபாடில்லை. இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் மெர்சலின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நிச்சயமாக மெர்சல் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு தரமான படமாக மெர்சலை எடுத்த ஒரு மனநிறைவு எங்களுக்கு இருக்கிறது. விஜய் […]

Continue Reading

‘108’ ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை

தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர உதவி சேவையில் உள்ளனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், அவசர மருத்துவ உதவி பெரிதும் பாதிக்கப்படும் என்றும், எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Continue Reading