நேர்மையாளர்களின் சார்பில் வாழ்த்திய விவேக்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமலின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில், “வருவது யாராக இருப்பினும் வாழ்த்துவது, மரபாக இருப்பினும் மகுடம் தரிக்க வைப்பது மக்களே. அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் […]

Continue Reading

மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி […]

Continue Reading

தமிழக உரிமைகள் பறிபோக சுயநல அரசியல் கட்சிகளே காரணம் : தங்கர்பச்சான் காட்டம்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  அனைவருக்கும் வணக்கம். நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும்  நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற […]

Continue Reading