பரத்துக்கு ‘காதல்’ போல, பிருத்விக்கு ‘தொட்ரா’

ஜே எஸ் அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப்படத்தை இயக்குனர் கே பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது ​இயக்கத்தில்​ தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். சரவணக்குமார் […]

Continue Reading

இயக்குநர்களை இயக்கிய இயக்குநர் ரஜாக்

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய 6 பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய […]

Continue Reading

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன். வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார். ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, மதுரை, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன். நெடுவாசலுக்கு சென்று மீத்தேன் […]

Continue Reading

சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : பட விழாவில் கே பாக்யராஜ் பேச்சு

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இதன் போது படத்தின் நாயகன் நிகில் மோகன், […]

Continue Reading

பேரரசு புத்தக வெளியீட்டு விழா, பாரதிராஜா பரபரப்புப் பேச்சு

இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், “முன்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜன கண மன பாடிவிட்டார்களா என்று நிகழ்ச்சி முடிந்ததை குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜன கண மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா? தமிழ் […]

Continue Reading