கண்ணகி, காந்தி சிலை வரிசையில் சிவாஜி சிலை

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனையடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி […]

Continue Reading

இனியாவது மாறுவார்களா? : தங்கர் பச்சான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவம் குறித்து, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலத்தைப் போல, மேலும் பலப்பல கிராமங்களை அழிக்கத் திட்டம் போட்டு முடித்து விட்டார்கள். இனி இதே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் நாம் சென்று போராடிக் கொண்டிருக்க […]

Continue Reading

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் : எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-து விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து, “2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மோடியை நாளை சந்திக்கிறார்

இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 19–ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் […]

Continue Reading

‘வைரமகன்’ பாடல்கள் வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

“சமூக உணர்வுகள்” (இரத்த தானம்) “கண்ணீர் அஞ்சலி” (மது பாதிப்பு), “பசுமை” (மரக்கன்றுகளின் பயன்), “முயற்சி” (தன்னம்பிக்கை விழிப்புணர்வு) ஆகிய பல்வேறு சமுதாய விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து நடித்த கோபி காந்தி “முதல் மாணவன்” படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், தற்போது “வீரக்கலை”, “வைரமகன்” இரண்டு படங்களையும் தயாரித்து நடித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இந்தப் படங்கள் வெளியாகும் அன்றே அவற்றின் டி.வி.டி. வெளியிடப்படுகிறது. […]

Continue Reading