கமலை வரவேற்கும் கெளதமி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது. இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நடிகை கெளதமி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் […]

Continue Reading

கமல்ஹாசனை சந்திக்கிறார் முதல்வர்

சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

மாறுவோம் மாற்றுவோம் : கமல்ஹாசன்

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்ற நம்மாழ்வார் கருத்துகளைப் பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து “கின்னஸ்” சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது. வரும் ஆகஸ்டு 26 ம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என […]

Continue Reading

கோட்டைத் தாண்டி புகழைச் சூடு : கமல்

ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ள புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 4 புதிய அணிகள் புதிதாக இடம் பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர். தற்போது தமிழக அணியின் விளம்பரத் தூதராக கமல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு […]

Continue Reading

தயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் […]

Continue Reading