Tag: சாம் சி எஸ்
ஆச்சர்யப்படுத்தும் அம்சத்துடன் ஜீவா படம்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படம் நடிகர் ஜீவாவின் 29வது படமாகும். படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் […]
Continue Readingஎன் வாழ்வின் முக்கியமான படம்!
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]
Continue Readingவிஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’, கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி’ […]
Continue Reading“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!
“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு […]
Continue Readingடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா
வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படம் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வொய் நாட் ஸ்டுடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் […]
Continue Reading
