மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி […]

Continue Reading

என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது : கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:- என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை […]

Continue Reading

ரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்

மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் […]

Continue Reading

அசத்தல் முடிவு எடுத்த நடிகர்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார். அதன் படி ‘தினகரன்’ நாளிதழ் சினிமா நிருபர் தேவராஜ் தனது உடலை தற்போது தானமாக வழங்கியுள்ளார். தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தேவராஜ் இவர் கடந்த 27 வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் […]

Continue Reading

அவர் சிறந்த விமர்சகர் : ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், ‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை […]

Continue Reading

`சத்யமேவ ஜயதே’ குறித்த கேள்விக்கு கமலின் பதில்

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதைத் தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார். இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை […]

Continue Reading

யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது : கமல்

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பது தான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. […]

Continue Reading

டுவிட்டரில் `விஸ்வரூபம்-2′ குறித்து புதிய தகவல்

கமலஹாசன் இயக்கத்தில் அவரே நடித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டதால், கமல் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்கள் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, `சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம்’ […]

Continue Reading

தயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் […]

Continue Reading