மொட்டை கதை சொன்ன பியா

எந்த ஒரு காதல் படமும் காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அனுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசும் போது, ”இந்த படமும், இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி அவர்கள் எனக்கு […]

Continue Reading

தெலுங்கில் பாட்டெழுதிய மதன்கார்க்கி

தமிழ் சினிமாவில் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை உடையவர்களுள் ஒருவர் மதன் கார்க்கி. தமிழில் பல்வேறு படங்களில், பல்வேறு பாடல்களை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, முதன்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதேநேரத்தில் `ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் […]

Continue Reading

எம்.கே.எஸ் ஸ்டுடியோஸ் எடுத்த மெர்சல் மூவ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்’. இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் `ஸ்பைடர்’ […]

Continue Reading

மோஷன் போஸ்டருக்கு எகிரும் எதிர்பார்ப்பு

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இப்படத்தையும் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தை இயக்கிய வினோத் இப்படத்திற்கு திரைக்கதை எழுத, நிர்மல் குமார் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி வில்லனாக நடித்து வந்த அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், […]

Continue Reading

குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் முருகதாஸ்

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், டீசரை ஆர்யாவும் வெளியிட்டார்கள். சமீபத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை வெளியிட்டார். படத்தின் […]

Continue Reading