பெண் இயக்குநரின் வெப் சீரிஸில் சுனைனா

News

 

தமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், கவலை வேண்டாம், தொண்டன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, சுனைனா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் சுனைனா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸை ‘திருதிரு துறுதுறு’ படத்தின் இயக்குனர் ஜே எஸ் நந்தினி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.