படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு – விஜய் சேதுபதியின் “நண்பேண்டா”!!

News

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் “செக்கச் சிவந்த வானம்”. இதில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உட்பட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் கலந்து கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, சிம்பு, விஜய் சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டி விடும்m புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சிம்பு ரசிகர்களுடன், விஜய் சேதுபதி ரசிகர்களும் வேக வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

நண்பேண்டா!!