அரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்

News
ரஜினிகாந்த்

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க மணிகண்டன் விரும்பி அணுகினார். ஆனால் ரஜினி நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி
அவர் கூறியிருப்பதாவது:- கதையை எழுதி முடித்த உடன் இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே ரஜினி போன்ற ஒரு கதாநாயகன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அவர் இந்த கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நான் அவரை சந்தித்து கதை சொன்ன அடுத்த வாரம் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்’.