மேலும் ஒரு மகுடம்!

Uncategorized

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த “தமிழன்” படத்திலும் நடித்திருக்கிறார். பல விருதுகளை வென்றுள்ள இவருக்கு, லண்டனிலிருந்து மேலும் ஒரு சிறப்பு மிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார்.

லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசியாவின் கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்திருக்கிறது.

ஆலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு கிடைத்துள்ளது.

“ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்று பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.