நீளிரா திரைவிமர்சனம்
நடிகர்கள் :நவின் சந்திரா, சனந்த், கபிலா வேணு, சிது குமரேசன், ரூபா கொடுவாயூர் மற்றும் பலர்.
இசை:கே,
ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்,
இயக்கம்: சோமிதரன்,
தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ.

நீளிரா நீண்ட இரவு இலங்கையில் உள்ள இரு தரப்புகள் ஏற்படும் போரில் இடையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தன் வாழ்க்கை வாழ்வதரத்தையும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை வாழ்க்கை நகர்கிறது,அதில் ஏற்படும் துன்பங்களும் அவர்கள் வாழ்வுரிமை சுதந்திரமும் பறிக்கப்பட்டு அந்த சூழ்நிலையிலும் ஒரு குடும்பத்தில் மகளுக்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக இலங்கை ராணுவம் குடும்பத்தையும் வீட்டையும் சுற்றி தன் கட்டுக்கோப்பில் வைத்து விடுவார்கள் பிறகு இவர்களை தாக்க எதிர்மறை இருக்கும் ஒரு அணியும் இவர்கள் இடைய போர் நடந்ததா இல்லையா திருமணம் முடிந்ததா இல்லையா மக்கள் என்ன ஆளானார்கள் என்பது தான் மீதி கதை.
நீளிரா படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் போலவே நம்மை வியக்க வைக்கிறார்கள் படத்தின் பெயர் நீண்ட இரவு ஆனால் கதைக்கு ஏற்ப படத்தின் நீளமும் மிகவும் சரியாகவும் பொருத்தமாகவும் போதுமான அளவில் அமைந்தது மிக சிறப்பு .
திருமணத்திற்கு முன் இரவு. வெளியே துப்பாக்கிச் சத்தம், உள்ளே அமைதிக்காகக் காத்திருக்கும் மனங்கள். இந்திய அமைதிப்படை வீரர்கள் வீட்டுக்குள் தஞ்சம் புகும் அந்தச் சூழல், கதை சொல்லும் விதமையே மாற்றுகிறது. அவர்கள் பாதுகாப்புக்கா? அல்லது புதிய அபாயத்திற்கான தொடக்கமா? என்ற கேள்வி முழு இரவையும் பிடித்துக்கொள்கிறது.
தொழில்நுட்ப ரீதியில் பேசும்போது, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை தான் இந்த படத்தின் முதுகெலும்பு.
இரவு நேரக் காட்சிகளை செல்வரத்தினம் பிரதீபன் படம் பிடித்த விதம் — அது வெறும் காட்சி அல்ல, ஒரு அனுபவம். ஒவ்வொரு நிழலும் ஒரு கதையைச் சொல்கிறது. கே-வின் பின்னணி இசை அந்த அமைதிக்குள் ஒளிந்திருக்கும் அச்சத்தை மெதுவாக வெளிக்கொணர்கிறது.
இயக்குநர் சோமிதரன் அந்த மண்ணில் வாழ்ந்த அனுபவம் இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இது கற்பனைக்கதை போல இல்லாமல், “இது நடந்திருக்கலாம்” என்ற உணர்வை தருகிறது. சாலையில் நடப்பதற்கே பயப்படும் சூழலில், ஒரு குடும்பம் திருமணத்தை நடத்த முயற்சிப்பது அதில் இருக்கும் வலி, அச்சம், அன்பு அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில் நீளிரா நீண்ட இரவு மக்களின் வலியும் வேதனையும் நம் மனதில் பதிக்கிறது .

