நீ ஃபார் எவர் திரை விமர்சனம் 

cinema news movie review

நீ ஃபார் எவர் திரை விமர்சனம்

நடிகர்கள் : சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, மற்றும் பலர்.

இசை: அஸ்வின் ஹேம்நாத்,

ஒளிப்பதிவு: ராஜா பாட்டாச்சார்ஜீ,

இயக்கம் : அசோக் குமார் கலைவாணி,

தயாரிப்பு:ழேன் ஸ்டுடியோஸ்.

கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் தனிப்பட்ட ஒரு குறிக்கோளுடன் கதைக்களம் நகர்கிறது

கதாநாயகன் தன் தாயுடன் தாத்தாவின் கண்டிப்பானா வளர்ப்பில் வளர்கிறார்  சென்னையில் சக நண்பர்களுடன் வசித்து வருகிறார் தன் திறமையால் ஒரு செயலியை  கண்டுபிடிக்கிறார்  அதனை ஒரு தனியார்   நிறுவனத்திடம் காண்பித்து பணியை பெற வேண்டும்  முயற்சிக்கிறார் ஆனால் அவரை அங்கு நிராகரிக்கப்படுகிறது  இதே போல் கதாநாயகியும் ஒரு பட இயக்குனராக வேண்டும் என்று ஒரு குறும்படம் எடுத்து ஒரு தயாரிப்பாளரிடம் காண்பிக்கிறார், ஆனால் அவரும் நீங்கள் ஒரு காதல் கமர்சியல் கதை பண்ணா என்ன என்று கைவிரித்து விடுகிறார்.

இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல்  போகிறார்கள், ஆனாலும் இவர்களை விதி எப்படி ஒன்று சேர்த்தது ? என்ன செய்தது என்பதுதான்  மீதியுள்ள கதை .

கதாநாயகன் சுதர்சன் கோவிந்த் அப்பாவி தனமாகவும் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், கதாநாயகி அர்ச்சனா ரவி இவரின் நடிப்பும் பாராட்ட தக்கது.

ஒய்.ஜி மகேந்திரன் நடிப்பு படத்தின் பலம் என்று சொல்லலாம் மற்ற நடிகர்களும் ஆங்காங்கே கனக்கச்சிதமாக பூர்த்தி செய்து உள்ளார்கள்.

இசையமைப்பாளர்  அஸ்வினி ஹேம்நாத்தின் மென்மையான இசையால் நம்மை ரசிக்கும்படி செய்துள்ளார். பின்னணி இசை சுமார் தான். ஒளிப்பதிவாளர் ராஜா பாட்டாச்சார்ஜீ கதைக்கேற்ப காட்சிகள் நன்றாகவே அமைத்துள்ளார்.

இயக்குனர் அசோக் குமார் கலைவாணி தன் படைப்பின் மூலம் காதலை உணர்ச்சிப்பூர்வமாக தான் உணர முடியும் என்பதை அழுத்த திருத்தமாக சொல்லி இருக்கிறார் மிக நன்று  இன்னும் முயற்சி தேவை.

மொத்தத்தில் நீ பார் எவர்  மென்மையான காதல் ரசிக்கலாம்.