மாமன் – திரைவிமர்சனம்
நடிகர்கள்:சூரி,ஐஸ்வர்யா,ராஜ்கிரண்விஜி,லட்சுமி,லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன் மற்றும் பலர்.
இசை:ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு:தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம்:பிரஷாந்த் பாண்டியராஜ்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அற்புதமான ஒரு குடும்ப காவியம் என்று சொல்லலாம் பிரவின் பாலத்தை உறவின் தனித்துவத்தை மகத்துவத்தை மிக அற்புதமாக இந்த படத்தில் இயக்குனர் பாண்டியராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் அற்புதமான ஒரு வாழ்வியலை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜன்.
தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக இந்த படம் பேச இருக்கிறது.
முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க முழுக்க எமோஷனல் என குடும்ப ரசிகர்களை குறிவைத்து கோடை விடுமுறையில் இந்த படம் திரைக்கு திரைக்கு வந்திருக்கிறது.

நிச்சயம் கோடை விடுமுறைக்கு ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு உன்னதமான படம் உன்னதமான படம் என்று சொல்லலாம் என்று கூட்டுக் குடும்பம் உறவு முறைகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக இந்த படம் ஒரு பாடமாக அமையும் என்று தான் சொல்ல வேண்டும்.
நடிகர் சூரியன் நடிப்பை பார்த்து நாம் அனைவரும் பிரம்மிக்க வேண்டியது இருக்கிறது. காரணம் இதுவரை அவரை நாம் ஒரு நகைச்சுவை நடிகராகவும் பார்த்தோம் விடுதலை படத்திற்கு பிறகு தான் அவரை ஒரு நல்ல நடிகராக பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் இந்த படத்தில பல முன்னணி நடிகர்களை தோற்கடிக்கும் அளவிற்கு தன் நடிப்பில் ரசிகர்களை அந்த அளவிற்கு கவர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு இணையாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவரை நிச்சயமாக பாராட்ட வேண்டும். சூரிய உடன் ஜோடி சேர தயங்கும் நடிகைகளிடம் இருந்து மாறுபட்டு ஏன் நடிக்க கூடாது என்று நடித்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை அப்படி கவர்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமி என்று பதில் எந்தவிதமான ஐயமில்லை.
சூரியன் அக்காவாக வரும் நடிகை சுவாசிகா இவரைப் பார்த்து நாம் பிரமித்துப் போக வைக்கும் அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தம்பியின் மீது பாசத்தை வெளியிடும்போதம் சரி
தன் மகனுக்காக தம்பி மனைவியிடம் சண்டை போடும் காட்சிகளிலும் சரி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ராஜ்கிரண், விஜி இந்த இருவரும் தாத்தா பாட்டியாக வருகிறார்கள். இவர்கள் வாழ்வியலை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நமக்கும் இப்படி ஒரு தாத்தா பாட்டி கிடைக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்திருக்கிறார்கள். அதைவிட கணவன் மனைவி வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அற்புதமாக இவர்களின் மூலம் இயக்குனர் பாண்டியராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுவாசிகா மகன் சூரியன் மருமகனாக நடித்திருக்கிறோம் சிறுவன் நடிப்பில் அவனும் தன் முதல் படத்திலேயே முத்திரை படித்திருக்கிறான் என்ற தான் சொல்ல வேண்டும். படத்தில் நடித்திருக்கிற ஒவ்வொரு கதாபாத்திரம் தன் கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

