மெட்ராஸ் மேட்னி திரைவிமர்சனம்
நடிகர்கள் :சத்யராஜ் காளி வெங்கட் ரோஷினி ஹரிபிரியன்.
இசை:கே.சி.பாலசாரங்கன்
ஒளிப்பதிவு:ஆனந்த்.ஜி.கே
இயக்கம் :கார்த்திகேயன் மணி

நடுதர மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கதை மற்றும் கதாபாத்திரங்களின் பார்வையாளர்களை இழுத்து செல்லக்கூடிய படம்.
நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார்.
சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குகிறார். அவரின் நடிப்பு, கதையின் உருமாற்றத்திற்கு தளமாக அமைகிறது.

ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக கலக்குகிறார்; ஷெல்லி கிஷோர் மனைவியாக கதைக்குத் தேவையான மெல்லிய உணர்வுகளைப் பரிமாறுகிறார்.
அம்மாவாக அறிமுகமான கீதா கைலாசம், இங்கு வித்தியாசமாக சிரிப்பும் சினிமாவில் மிக அரிதாக காணப்படும் மகிழ்ச்சியான அம்மா கேரக்டராக கலக்குகிறார்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே எளிமையான மக்களின் வாழ்க்கை சூழலையும், அவர்களின் இயற்கையான வாழ்விடங்களையும் மிக நுணுக்கமாகப் படம் பிடித்திருக்கிறார்.
இயக்குநராக கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கையை உன்னிப்பாகப் பதிவு செய்து, அவர்களின் வெறும் வாழ்வைச் சாகசமாகவே காட்ட முயற்சித்துள்ளார். நவீன மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல் இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது நம் வாழ்வில்

