மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம்
நடிகர்கள் :ஆனந்த்ராஜ், சம்யுக்தா,அரத்யா, முனிஷ் காந்த்,மற்றும் பலர்.
இசை: ஸ்ரீகாந்த் தேவா,
ஒளிப்பதிவு :அசோக் ராஜ்,
இயக்கம்:ஏ. எஸ். முகுந்தன்,

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது.
ராயபுரம் தாதா பூங்காவனம் (ஆனந்தராஜ்) ஏரியா அடிப்படையில் “ரவுடி ஏஜென்சி” நடத்துவது போன்ற யூனிக் செட்டப்பில் படம் தொடங்கினாலும், அதன் பின்னர் கதை மிக நேர்த்தியாக வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. ரவுடிசமும், காமெடியும், ஆக்சனும், செண்டிமெண்டும் எல்லாம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியும் முழுமைப்படாமல், கதை திசைமாறும் தருணங்கள் அதிகம்.
பூகாவனத்தின் என்கவுண்டரை தடுக்க அவர் செய்வது ஹீரோயிசமா அல்லது காமெடியா என்பது பல காட்சிகளில் தெளிவாகத் தெரியாமல் போகிறது. சில இடங்களில் பிளாக்–காமெடி என்ற பெயரில் வன்முறை காட்சிகள் கூட சீரற்ற நகைச்சுவையாக மாறுகின்றன.
ஆனந்தராஜ் ஆரம்பத்தில் தான் “மரண அஞ்சலி” போட்ட போஸ்டர் மூலம் ஒரு ஷாக் கிரியேட் செய்வது நல்ல முயற்சி. பின்னர் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஆனந்தராஜ் தன் பழைய வில்லத்தன மெருகையும், காமெடி டைமிங்கையும் கலந்து நன்றாக நடித்திருந்தாலும், முழுக் கதையையும் அவர்மீது மட்டும் ஆழமாக சுமத்தி விட்டதால் கதையின் பலவீனங்கள் மேலும் வெளிப்படுகின்றன.
கிளைமாக்ஸில் வரும் “கூத்து” காட்சி இரண்டாம் பாகம் எடுக்க வைக்கப்பட்ட ஒரு ஓபன் எண்ட் போலத் தோன்றுகிறது—ஆனால் இரண்டாம் பாகம் தேவையா என்பது சந்தேகமே.

சம்யுக்தா இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் சீன்களில் உயிரோட்டம் காட்டியிருந்தாலும், அவரின் கதாபாத்திரத்திற்கு ஸ்கிரிப்ட் ஆதரவு குறைவு.
முனீஷ்காந்த் காமெடிக்காக கொண்டு வரப்பட்டாலும், பல இடங்களில் அவரின் டிராக்கள் மீண்டும் மீண்டும் வருவதால் சலிப்பை ஏற்படுத்துகிறது.
சசி லயா, தீபா, ராம்ஸ், ஆதித்யா போன்றவர்கள் குறைவான ஸ்கோப் உடன் மட்டுப்படுத்தப்பட்ட வேடங்களில் மட்டுமே தோன்றுகிறார்கள்.
இசை ஸ்ரீகாந்த் தேவா: பல வகை பாடல்களை கொடுத்தாலும், எந்தப் பாடலும் நீண்டநேரம் மனதில் நிற்கும் வகையில் இல்லை.
ஒளிப்பதிவு அசோக் ராஜ்: பிளாக் காமெடி படத்தின் டோனை வலுப்படுத்த முயன்றாலும், சில ஃப்ரேம்கள் டிவி சீரியல் லெவலில் தோன்றுகின்றன.
இயக்கம் ஏ. எஸ். முகுந்தன்: ரவுடி ஆக்ஷன் குடும்ப செண்டிமெண்ட்காமெடி எல்லாம் சேர்க்க முயன்ற முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், இதை எல்லாம் சமச்சீராக கையாளத் தவறியதால் படம் பல இடங்களில் சிதறல்களுடன் படுத்துக் கொள்கிறது.
மொத்தத்தில்
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி சிறந்த கம்பெனி.

