மாரிசன் திரைவிமர்சனம்
நடிகர்கள்:வடிவேலு, பாகத் பாசில், கோவை சரளா, தேனப்பன், விவேக் பிரசன்னா, மாற்று பலர்.
இசை:யுவன் சங்கர் ராஜா,
இயக்கம்:சுதீஷ் சங்கர்,
தயாரிப்பு:RB சௌதிரி.

மாரிசன் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை. இந்தப் படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடும் ஆகவே படத்தின் கதையை சொல்லாமல் படத்தின் கருவை மட்டும் சொல்லுகிறோம். பள்ளிக்கூட வாத்தியாரின் ஆதரவோடு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கடத்தி கற்பழித்து வெளிநாட்டுகளுக்கு விற்கும் இந்த கும்பலை எப்படி பிடிக்கிறார்கள் யார் கொலை செய்கிறார்கள் யார் கடத்தியது யார் காப்பாற்றுகிறார்கள் என்பதெல்லாம் படத்தைப் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
வடிவேலு நல்ல காமெடியன் நடிகர் என்று தெரியும் ஆனால் இதுவரை நாம் பார்க்காத ஒரு வடிவேலை இந்த படத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு காட்சிகளிலும் வடிவேலு மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்திஉள்ளார்.குறிப்பாக ஞாபகம் வருகை தரும் காட்சிகளில் மிக அற்புதம்.
பகத் பாசில் ஒவ்வொரு காட்சியலும் நகைச்சுவை கலந்த ஒரு நடிப்பின் மூலம் பட்டையே கிளப்பியுள்ளார்.
விவேக் பிரசன்னா இவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம் குறைந்த காட்சிகள் வந்தாலும் நம் மனதில் நிறைவாக நிற்கிறார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்தின் மிக அற்புதமான பின்னணிசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்
மொத்தத்தில் மாரிசன் அமைதியான ஒரு த்ரிலர் படம்.

