லவ் மேரேஜ் திரைவிமர்சனம்
நடிகர்கள்:விக்ரம் பிரபு,சுஷ்மிதா பட் மீனாட்சி தினேஷ்,ரமேஷ் திலக், கஜராஜ், அருள் தாஸ், மற்றும் பலர்
இசை :ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு :மதன் கிறிஸ்டோபர்
இயக்கம் :ஷண்முக பிரியன்
தயாரிப்பு :assure films & rise east
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லவ் மேரேஜ் கதாநாயகன் விக்ரம் பிரபுவிற்க்கு நீண்ட நாளுக்காக திருமணம் தடைப்பட்டு வருகிறது அவருக்கு ராசி சரி இல்லையா ஏதேனும் குறை இருக்குமா என்று அவர் சொந்த ஊரிலேயும் சொந்தத்திலும் பெண் குடுக்க யாரும் விரும்பவில்லை. இதனால் வெளியூரில் பெண்பார்க்கப் போக பார்த்த உடனே நிச்சயதார்த்த ஏற்பாடு நடக்க, பிறகு முடிந்த உடன் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பெண் பார்க்க வந்த வீட்டிலேயே தங்கும்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. இம்முறையாவது அந்த பெண்ணிடம் இவருக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் மீதி கதை.
கதாநாயகன் விக்ரம் பிரபு தன் கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். அதுவும் பெண் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்தில் அவர் நடிப்பு எல்லாம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. மற்றும் பல நடிகர்களும் அவர்கள் வேலையே சிறப்பாக செய்துள்ளார்கள் மேலும் ஆங்காங்கே நகைச்சுவை நம்மளை சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம். இயக்குனர் சண்முக பிரியன் தனது முதல் படம் போல் இல்லாமல் சிறப்பாக இயக்கி உள்ளார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பின்னணி இசை பிரமாதம் பாடல்கள் ஒரு முறை கேட்கும்படியாக தான் உள்ளது இருந்தாலும் படத்திற்கு ஒரு பலம்.
ஒளிப்பதிவு படத்ற்கு அழகு
லவ் மேரேஜ் குடும்பங்கள் கொண்டாடும் படம்.

