லீடர் திரைவிமர்சனம் 

cinema news movie review

லீடர் திரைவிமர்சனம்

நடிகர்கள் :லெஜன்ட் சரவணன்,  ஆண்ட்ரியா,ஷாம்,லால்,சந்தோஷ் பிரதாப், மற்றும் பலர்.

இசை :ஜிப்ரான்,

ஒளிப்பதிவு : வெங்கடேஷ். S

இயக்கம்:R. S துரை செந்தில்குமார்,

தயாரிப்பு :லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்ஷன்.

கதாநாயகன் சரவணன் தூத்துக்குடியில் சாதாரண மெக்கானிக்காக தன் அன்புள்ள மகளுக்கு பாசமுள்ள அப்பாவாக உயிருக்கு உயிராக வாழ்ந்து வருகிறார் அவர் தூத்துக்குடியில் உள்ள ஆர்பாரில் உள்ள  விலை உயர்ந்த கார்களை பழுது பார்த்துக் கொடுப்பார்  அப்போது அந்த ஆர்பாரில் சட்ட விரோதமான மூன்று கண்டெய்னர்  வந்து இறங்கும் அதை எப்படியோ காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள்  கைது செய்யப்பட வேண்டும் என்று தீவிர முனைப்பில் காவல்துறையினர் செய்து கொண்டு இருக்கும். ஒரு நாள்  சரவணன் அந்த ஆர்பாருக்கு கார்களை கொண்டு வந்து கொண்டு போவதையும் ஆண்ட்ரியவிற்கு தெரியவரும் அப்போது ஒரு திட்டம் தீட்டுவார்கள் சரவணா மகளை வைத்து  அந்த தாதா தான் கடத்தியது போல் மிரட்டி அந்த கண்டெய்னரில் என்ன இருப்பது என கண்டுபிடிக்கவே இவ்வாறு செய்து அதுவும் போலீசாரிடம்   சிக்கிக் கொள்ளும்  அதில் கதாநாயகன் சரவணன்  சொன்னதெல்லாம் செய்து கொண்டு வருவார் பிறகு தான் தெரியவரும் இவை அனைத்தும் காவல்துறையான ஆண்ட்ரியாவின் திட்டம் என்று.   பிறகு என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை வேகமாகவே போகும் அதுவும் குறிப்பாக அந்த ரயில் சண்டை காட்சி மிகவும் அற்புதம் பிரமாண்டமாகவே அமைந்திருக்கிறது, எங்கெங்கே சண்டை காட்சி வேணுமோ அது சிறப்பாகவே இப்படத்தில் அமைந்துள்ளது.

நடிப்பில், சரவணன் தனது முதல் படத்தை விட அதிக நம்பிக்கையுடன் காட்சியளிக்கிறார். குறிப்பாக மகளுடன் இணைந்த உணர்ச்சி காட்சிகளில் அவர் காட்டும் ஈடுபாடு கவனிக்கத்தக்கது. சண்டைக் காட்சிகள் ஆக்சன் ஹீரோவாக நன்றாக நடித்துள்ளார், ஆண்ட்ரியா, ஷாம் மற்றும் வில்லன் தரப்பில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களுக்கான பங்கினை நன்றாக நிறைவேற்றுகின்றன. சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரம் சுற்றி வரும் ட்விஸ்ட்கள் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெறக்கூடியவை.

தொழில்நுட்ப ரீதியாக படம் உறுதியான அடிப்படையில் நிற்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இயல்பான வண்ணத்தையும் தீவிரத்தையும் கொடுக்கிறது. எடிட்டிங் சுறுசுறுப்பாக அமைந்து, திரைக்கதையின் வேகத்தை தக்கவைத்திருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் உணர்ச்சியையும் பதட்டத்தையும் உயர்த்துகிறது.

ஆனால், கதையின் மையக் கரு புதுமையானதல்ல. பல மாஸ் படங்களில் பார்த்த அதே மாதிரியான டெம்ப்ளேட் சில இடங்களில் தெரியும். இருந்தாலும், அதனை வேகமான திரைக்கதையால் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக லெஜன்ட்  சரவணன் மாற்றி காட்டியுள்ளார் இந்த பெருமையை அவரை சேரும் பிரம்மாண்டத்துக்கு மேலும் பிரம்மாண்டம் சேர்த்துள்ளார். அதை என்னவோ வழக்கம் போல் கதை தான் இருந்தாலும் நமக்கு அதை மிகவும் சிறப்பாகவும் ரசிகம்படியாகவும் தந்துள்ளார்.

மொத்தத்தில் லீடர் லீடர் தான்