புதிய களத்தில் கீர்த்தி சுரேஷ்

Special Articles

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்க கீர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வெப் தொடரின் கதையைக் கேட்டதும் அவருக்குப் பிடித்துவிட்டதாம். அதனால், அதை அவரே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம். அதில் அவரே நடிப்பாரா என்பது பின்னர் தான் தெரியவரும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.