காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

cinema news movie review

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

 நடிகர்கள்: பரத், பிரகாஷ்ராஜ்,சங்கீதா, அஜய் கார்த்தி, பவானி ஸ்ரீ, மற்றும் பலர்.

இசை :சாம் சி.எஸ்,

ஒளிப்பதிவு :சுரேஷ் பாலா,

இயக்கம்: ஸ்ரீ செந்தில்,

தயாரிப்பு: ஸ்கை பிக்சர், பைவ் ஸ்டார்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புத்தாண்டு கோலாகலமான கொண்டாட்டத்தின் போது மித்ரா என்ற ஒரு சிறுமி காணாமல் போய்விடுவாள்,அந்த சிறுமையை கண்டுபிடிக்க பணியில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சியில் ஒரு  திரில்லர் படமாக தான்   இந்த காளிதாஸ்2.

இந்த வழக்கினை விசாரிக்க காவல்துறை அதிகாரியாக பரத் களமிறங்குகிறார் அக் குடியிருப்பில் வசிக்கும் அனைவரையும் அவர் விசாரிக்கிறார்  அப்போது காலையில் அருகில் உள்ள காலி இடத்தில் ஒரு பெட்டியில் குழந்தை பிணமாக கண்டுபிடிக்கப்படுகிறது, இதற்கு காரணம் யார்  என்று  தேடப்படுகிறது, ஆனால் ஒருவர் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தும் படி ஆக்குகிறது,  அவர்தான் இருப்பாரோ என்று பல கோணத்தில் சந்தேகம் இருக்கிறது அதன் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகிறது இப்படி பல மர்மமான முடிச்சியில் கதை நகர்கிறது இறுதியில் அவர் கண்டுபிடித்தார் இல்லையா இதற்கு காரணம் என்ன என்று தான் மீதி கதை.

பரத் தனது கதாபாத்திரத்தில் மிகத் தெளிவான, கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பை வழங்குகிறார். ஒரு போலீஸ் அதிகாரியின் உளவியல் அழுத்தங்களையும் பொறுப்பையும் உணர்த்தும் விதமாக அவரது நடிப்பு அமைந்துள்ளது. பவானி ஸ்ரீ, உறுதியான அதிகாரியாக வலுவான திரைநிலையை உருவாக்குகிறார்.

பிரகாஷ் ராஜ் தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதைக்கு ஒரு தனித்துவமான எடையை சேர்க்கிறார். கிஷோர், சங்கீதா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கீதாவின் வரவு கவனிக்கத்தக்கது.

இசை சாம் சி எஸ் ஒரு  திரில்லர் படத்துக்கு எவ்வாறு இசை அமைக்கப்பட வேண்டும் என்று கவனமாக அப் பணியை சிறப்பாக  செய்துள்ளார்.

ஒளிப்பதிவு  சுரேஷ் பாலா கேமராவின் கை வண்ணம் மிக சிறப்பு இரவு காட்சிகளில் அமைக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே நன்றாகவே அமைந்துள்ளது.

இயக்குனர் ஸ்ரீ செந்தில் தன் பணியை நன்றாகவே செய்து உள்ளார் என்று எந்த விதமான ஐயமும் இல்லாமல்  நிச்சயம் அவரை பாராட்டப்பட வேண்டும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்  யாராலும் கணிக்க முடியாத காட்சிகளை அமைத்த விதமும் மிக அற்புதம், இருப்பினும் சில கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் தான் கொஞ்சம் குறைவு.

மொத்தத்தில் காளிதாஸ் 2 நம்மையும்   சேர்ந்து தேட வைக்கிறது.