இறுதிகட்டத்தில் “காலா”!

Uncategorized

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பரபரப்பான விவாதங்களுக்கிடையே, “காலா” படத்தின் அடுத்தகட்ட வேலையை இயக்குநர் பா.ரஞ்சித் ஆரம்பித்துள்ளார்.

கபாலி படத்திற்குப் பிறகு இரண்டாம் முறையாக இணைந்துள்ள திரைப்படம் “காலா”. “வுண்டர்பார் ஃப்லிம்ஸ்” சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின்
படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டிருக்கிறது. ஏற்கனவே படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்ரும் இரண்டாம் லுக் வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள “காலா” படத்திற்காக மும்பை தாராவி பகுதியை தத்ரூபமாக உருவாக்கியிருப்பது பற்றி
இப்போதே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலா படத்தின் டப்பிங் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள “நேக்ஸ் ஸ்டுடியோ”வில் இன்று பா.ரஞ்சித் முன்னிலையில்
பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியுள்ளது.

2018 ஏப்ரல், தமிழ் புத்தாண்டு தினத்தில் படம் வெளியிடப்படுவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருவதாக தெரிகிறது.