சர்கார் அப்டேட்… தளபதி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி..!!

News

தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்‌ஷ்மி சரத்குமார், பழ கருப்பையா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை தீபாவளி வெளியிடாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. 6 ஆம் தேதி தீபாவளி தினம் செவ்வாய்கிழமை என்பதால் படத்தினை முன்கூட்டியே, அதாவது 2 ஆம் தேதி வெள்ளியன்றே திரைக்கு கொண்டு வரும் முடிவில் இருக்கிறார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என அடுத்த அடுத்த நாள் விடுமுறை தினம் என்பதால் ஜாக்பாட் அடிக்க இதுவே சரியான தருணம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் படக்குழு.

இதனால் 1 ஆம் தேதி திரையரங்குகளை தயார் செய்து வைக்குமாறு மறைமுக செய்தி சன் பிக்சர்ஸ் மூலமாக திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.