விஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி – யுவன் சங்கர் ராஜா

Special Articles
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக உள்ளார்.
தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை என ஏராளமான அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், விஜய்யுடன் புதிய கீதை படத்தில் மட்டுமே பணியாற்றினார். இப்படத்திலும் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா அமைத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் யுவன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தளபதி கூட எப்போ ஒர்க் பண்ண போறீங்க என கேட்டார். இதற்கு யுவன், நான் எப்போதும் ரெடி தான் என பதிலளித்துள்ளார். இதன்முலம் விரைவில் விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.