ஹேப்பி ராஜ் திரைவிமர்சனம் 

cinema news movie review

ஹேப்பி ராஜ் திரைவிமர்சனம்

நடிகர்கள்: ஜி.வி பிரகாஷ் குமார்,ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா, மற்றும் பலர்.

இசை:ஜஸ்டின் பிரபாகரன்,

ஒளிப்பதிவு: மதன் கிரிஸ்டோபர்,

இயக்கம்:மரியா ராஜா இளஞ்செழியன்,

தயாரிப்பு: பியாண்ட்  பிக்ச்சர்ஸ் .

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் தன் கல்லூரியில் படிக்கும் தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்துவார் ஆனால் அந்த தோழியோ அந்த காதலை ஏற்க மறுக்கிறார் காரணம் ஊரில் உன் அப்பாவை   குதிரை முட்டை வாத்தியார் என அழைப்பார்கள் , இது மட்டுமல்லாமல்   தன்னையும் குதிரை முட்டை வாத்தியார் மருமகளே என்று என்னை அழைப்பார்கள் என்று கேலி செய்து காதலை நிராகரித்து விடுவார் இதனால் மனமுடைந்து போவார் ஜீவி பிரகாஷ் குமார்,

அப்பா மகன்  பாசத்துடன்  வசித்து வரும் தன் அப்பாவை ஊர் மக்களால் கேலி செய்து வருவார்கள், ஆனால் சிறு வயதில் இருந்து அப்பாவிடம் நெருக்கமாகவும் பாசமுடனும் வாழ்ந்து வரும் கல்லூரி படிக்கும் காலத்தில் சற்று விலகி  அப்பாவின் மீது ஒரு  மன கஷ்டத்துடன் இளைஞராக வாழ்ந்து  வரும் பிரகாஷ் குமார், தன் ஊரை விட்டு வெளியூருக்கு சென்று பணிபுரியலாம் என்று முடிவு எடுப்பார் அங்கு சென்று கதாநாயகியான ஸ்ரீ கௌரி பிரியாவை  சந்திப்பார், இருவரும் காதலித்து வருவார்கள், ஜி.வி பிரகாஷ் குமாரின் தன் அப்பாவை இவர்கள் குடும்பத்துடன் எப்படி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிறகு என்ன நடக்குமோ என்று ஒரு அச்சத்தில் இருப்பார், இருவர் குடும்பமும் சேர்ந்து இவர்கள் காதலை ஏற்றார்களா? திருமணம் நடத்தினார்களா? என்று தான் மீதி கதை.

ஜிவி பிரகாஷ் குமார் வழக்கம் போல் குறும்புத்தனமான   நடிப்பின்  மூலம் தன் முத்திரையை பதிக்கிறார், தன் அப்பாவின் மீது உள்ள பாசத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்த முடியாமல் உணர்ச்சிப்பூர்வமாக சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளார்,

அப்பாவாக ஜார்ஜ் மரியான் தன்னை கேலி செய்யும்  ஊர் மக்களுக்கு முன்னாடி நல்லா படித்து ஒரு ஆசிரியராக உயர்ந்து காட்டி, தன் நடிப்பின் மூலமாக படத்தில் முழுக்க வரும் காட்சியில் நம்மை கவர்கிறார்  பெரிய பலமாகவும் அமைகிறார்,  கீதா கைலாசம் அம்மாவாக வரும் தன் கதாபாத்திரத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

கதாநாயகியின் அப்பாவாக வரும் அப்பாஸ் ரீ என்ட்ரி   கொடுத்திருக்கும் வரவேற்கப்பட வேண்டும், அவரின் தோற்றமும் நடிப்பும் அருமை ஒரு காட்சியில் நடனமும் அற்புதம்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் வழங்கியுள்ள பாடல்கள் கதையின் ஓட்டத்துடன் இணைந்து இனிமையாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சிகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் மதன் கிரிஸ்டோபர், கிராமப்புற மற்றும் நகரப்புற காட்சிகளை கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், தன் முயற்சிக்கு பாராட்டுக்கள் ,பெற்றோர்கள்  மீது உள்ள கேலி பெயரால் வாழும் பிள்ளைகளின் மனவலியும் தந்தையின் பாசத்தையும் உணர்வுபூர்வமாக  எடுத்துக்காட்டி உள்ளார், ஆனால் முதல் பாதில் நகைச்சுவை சற்று குறைவுதான் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்  இரண்டாம் பாதியில் குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் சில  காட்சியாக  மனித நேயமும்    உணர்ச்சியாகவும் நம்மை உணர வைக்கிறார். சற்று நீளத்தை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ஹாப்பி ராஜ் குடும்பத்தின் உணர்ச்சியும் பாசமும் மிகவும் நெருக்கமான படம்.