டி என் ஏ  திரைவிமர்சனம்

cinema news movie review
டி என் ஏ  திரைவிமர்சனம்

நடிகர்கள் :அதர்வா, நிமிஷா சஜெயன், பாலாஜி சக்திவேல், சேத்தன்,ரமேஷ் திலக், ரித்விகா, சுப்பிரமணி சிவா,கருணாகரன் மற்றும் பலர்

இசை:ஜிப்ரான்

இயக்கம்:நெல்சன் வெங்கடேசன்,

DNA ஒரு திரில்லர் படம்.

 

கதாநாயகன் அதர்வா தன் காதல் தோல்வியால் பாதை மாறி சில கெட்ட பழக்கத்திற்க்கு உள்ளாககிறார் இதனைக் கண்டு வீட்டில் அவரை வெறுக்கிறார்கள் அவமானப்படுத்துக் கிறார்கள், ஒருநாள் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு நடக்கிறது அந்த நேரத்தில் எதிர் பாராமல் இவர் வந்து ஒரு மனக்கசப்பு ஏற்படுகிறது அந்த திருமணம் தள்ளி போக இவர் மீது குடும்பத்தினர் கோபம் அடைகிறார்கள்,சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அதாவது நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த திருமணத்தை தடுக்க ரமேஷ் சில போராடுகிறார். இருந்தும் அதர்வா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஒரு குழந்தையும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் குழந்தையை இங்கு பெற்று வைக்க கொண்டு போகும் செல்வார்கள் அந்த நேரத்தில் குழந்தை மாறிவிடும். இதை சரியாக கண்டுபிடித்து விடுவார் நிமிஷா குழந்தையை மாற்றி விட்டார்கள் என்று அதர்வாவிடம் நிமிஷா சொல்ல குடும்பத்தில் இருக்கிற அனைவரும் அவள் ஒரு மனநிலை சரியில்லாதவல் உங்களுக்கு தெரியாதா அவள் சொல்வதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அதர்வாவை சமாதானம் படுத்துகிறார்கள் ஆனால் நிமிஷ ஒரே பிடிவாதமாக குழந்தையை மாற்றி விட்டார்கள் என்று அடம் பிடிப்பதால் அதர்வா அந்த மருத்துவமனையில் விசாரிக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனை இல்லை குழந்தை மாற எந்தவிதமான வாய்ப்பு இல்லை என்று சொல்ல இவரும் ஒரு கட்டத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார் ஆனால் அவர் மனதில் தன் மனைவியின் நிலையை கண்டு ஒரு வேதனையை தருகிறது இதனால் குழந்தையை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார் டிஎன்ஏ டெஸ்டில் இது வேறு குழந்தை என்று தெரிய வர தன் குழந்தையை தேடி அலைகிறார் தன் குழந்தையை கண்டுபிடித்தார் இல்லையா என்பதுதான் கதை.

 

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி படங்களும் அது மட்டுமில்லாமல் நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை களத்துடன் தான் வந்திருக்கிறார் அப்படித்தான் இந்த படமும் குழந்தை கடத்தல் என்பது நாம் ஏற்கனவே பல படங்கள் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு திரைக்கதையை கொடுத்து நம்மை பிரமிக்க வைக்கிறார். இன்றும் நரபலி இருக்கிறது என்ற விஷயங்கள் எல்லாம் இந்த படத்தில் காண்பித்திருக்கிறார் அது மட்டுமல்ல சென்னையிலேயே இந்த நரபலி எல்லாம் நடக்கிறது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு திரில்லர் கதையை எழுதிவிட்டு கதைக்கு ஏற்ப கட்சிதமான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து மிகவும் அற்புதமாக இந்த படத்தை நமக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதர்வா நீண்ட நாள்  பிறகு தன் திறமையை காட்டுவதற்காக வந்திருக்க திரைப்படம் தான் டி என் எ  அவர் எத்தனையோ படங்கள் பண்ணி இருந்தாலும் இந்த படம் தான் அவர் முத்திரை பதிய வைக்கும் காதல் தோல்வி விரத்தி தன் மனைவியிடம் காட்டும் அரவணைப்பு தன் குழந்தையைக் காணவில்லை அந்த பரிதவிப்பு அத்தனை இடத்திலும் தன் நடிப்பால் சிறப்பாக நடித்துள்ளார். என்று சொன்னாலும் மிகையாக்காது.

நிமிஷா சஜ்யன் மலையாள நடிகை என்றாலும் தமிழ் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் நிமிஷா முழுசா என்றே சொல்லலாம் தன் குழந்தையின் பிரிவை காட்சிககு காட்சி நம நெஞ்சை நெகிழ வைக்கும் அளவிற்கு ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாகவும் நடித்துள்ளார்கள் பாலாஜி சக்திவேல் போலீஸ் அதிகாரியாக வந்திருப்பது கட்சிதமாக உள்ளது இன்னும் குறுகிய நாட்களில் ரிட்டயர்மென்ட் நான் இந்த கேசில் துப்பு துலகக வேண்டுமா என்று கேட்க ஆமாம் நீங்கள் தான் என்று செய்ய வேண்டும் என்று சொல்ல அந்தக் குழந்தையை கிடைக்க அவர் படும் பாடு மிகவும் அற்புதம், இன்னொரு பக்கம் அந்த கடத்தல்காரி கிழவி அற்புதமாக நடித்துள்ளார் நம்மளை மிரள வைத்துள்ளார்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் என்று சொன்னால் இசையமைப்பாளர் ஜிப்ரன்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான ஒரு திரில்லர் கதையின் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஏனென்றால் ரசிகர்கள் அந்த அளவுக்கு 15 நிமிடம் ஆரவாரம் செய்து அவரை பாராட்டுகிறார்கள். நகைச்சுவை படங்களுக்கு கைதட்டி பார்த்திருப்போம் ஆனால் ஒரு திரில்லர் படத்திற்கு அந்த கதையுடன் தன்னை இணைத்துக் கொண்டு அற்புதமான உணர்வை ரசிகர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 

மொத்தத்தில் இந்த டி என் எ வெல்டன்.