இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனின் சுந்தரபாண்டியன் சென்டிமென்ட்

News

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் – மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுந்தரபாண்டியன் மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா பட போஸ்டர்
இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதே தினத்தில் தான் 2012 ஆண்டு ஜூலை 3ம் தேதி எஸ்.ஆர்.பிரபாகரனின் சுந்திரபாண்டியன் படத்தின் முதல் போஸ்டர் ரிலீசாகி இருக்கிறது.