“காலா” சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு – தனுசின் திட்டம்!!

News

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தினை தனுஷ் தனது “வுண்டர்பார் பிலிம்ஸ்” மூலம் தயாரித்துள்ளார். “கபாலி” படத்தில் புழுதி கிளப்பிய சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இந்த இசை வெளீட்டு விழாவில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது.

“வுண்டர்பார் ஸ்டுடியோஸ்” நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான “டிவோ” (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம்

https://www.facebook.com/OfficialWunderbarFilms/

https://www.youtube.com/wunderbarstudios