’மதுர வீரன்’ மாதிரி ஒரு படம்… களத்துக்கு தயாரான பி ஜி முத்தையா!

News

மதுர வீரன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகனாவர் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா. தற்போது தயாரிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’ என்ற படத்திற்கு தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இவரே. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படத்திற்கு பிறகு ஒரு படத்தை தயாரித்து அதற்கு பிறகுதான் ஒரு படத்தை இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் பி ஜி முத்தையா.

நான் இயக்கும் படம் ‘மதுர வீரன்’ பாணியில் கிராமத்து பின்னனியில் தான் இருக்கும் என்றும், இப்படத்திற்கு பெரிய ஹீரோவை களம் இறக்கும் முடிவில் இருக்கும் இருப்பதாகவும் இயக்குனரான தயாரிப்பாளர் பி ஜி முத்தையா தெரிவித்துள்ளார்.