கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம்

cinema news movie review

கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம்

 

நடிகர்கள் :கௌஷிக்,பிரதிபா,ஆருள் சங்கர், சிங்கம் புலி,சிலுமிஷம் சிவா,கஞ்சா கருப்பு,அலெக்ஸ் பாண்டியன்,மற்றும் பலர்.

இசை :என். ஆர். ரகுநாதன்,

ஒளிப்பதிவு :பிரகத் முனிசாமி,

இயக்கம் :அலெக்ஸ் பாண்டியன்.

 

கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்ப இளைஞர் கௌஷிக், பிளஸ் டூ முடித்துவிட்டு துபாயில் வேலை பார்க்க திட்டமிடுகிறார். அப்போது தான் கிறிஸ்டினாவை சந்திக்கிறார். அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது. துபாய் கனவை விட்டு விட்டு, நாயகி படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.

அங்கே நண்பரின் காதலுக்கு உதவி செய்யும் போது ஒரு விபரீதம் ஏற்படுகிறது. அதிலிருந்து எழும் சிக்கல்களை இயக்குனர் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார்.

கௌஷிக் –முதல் படமென்றாலும், ஒரு கிராமத்து இளைஞராக மிக இயல்பாகவும் நம்பகமாகவும் நடித்திருக்கிறார்.
பிரதிபா குறும்பட அனுபவம் இருப்பதால், கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் துல்லியமாக நடித்துள்ளனர்.

இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், அனுபவமில்லாதவராக இருந்தாலும், ஒரு சராசரி படத்திலிருந்து வித்தியாசமான முயற்சி செய்துள்ளார். சில சிறிய குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை உண்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், கதைக்கு ஏற்ற முகங்களை தேர்வு செய்திருப்பது ஒரு நேர்மையான முயற்சி.

இசை அமைப்பாளர் என்.ஆர். ரகுநாதன் – படத்திற்கு சிறந்த பின்னணி இசையால் பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பிரகத் முனிசாமி – கிராமப்புற காட்சிகளை அழகாகப் பதிவு செய்துள்ளார்.

சிறு குறைகள் இருந்தாலும், கதையிலும், இசையிலும், நடிப்பிலும் உண்மைத் தன்மை காணப்படுகிறது. “கிறிஸ்டினா கதிர்வேலன்” ஒரு எளிமையான, உணர்வுகள் கலந்த காதல் படம்.