எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் […]

Continue Reading

பா.ரஞ்சித் தொடங்கி வைத்த “பற”!

‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.  இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் […]

Continue Reading

மீசையை முறுக்கு.. சசி குமாரை நொறுக்கு!

முன்னோரு காலத்தில் நாட்டாமை வேடம் என்றாலே எல்லா இயக்குநர்களும் நேராக விஜய குமார் வீட்டிற்குப் போய் விடுவார்கள். விஜய குமார் முடியாதென்றால் தான் வினு சக்ரவர்த்தி, சண்முக சுந்தரம் எல்லாம்! அதேபோல் காதல் கதைகளோடு நவரச நாயகன் கார்த்திக் வீட்டின் முன்னால் காத்துக் கிடந்த இயக்குநர்கள் ஏராளம் ஏராளம். அந்த வகையில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் இருந்து “மண் பெருமை” பேசக்கூடிய கதைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உலவும் இயக்குநர்களின் முதல் தேர்வும், […]

Continue Reading

ஆண்ட்ரியா பாட.. சன்னி லியோன் ஆட..

பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்குபவர் நடிகை சன்னி லியோன். இப்போதெல்லாம் இந்தியாவில்                                                                        எந்த பகுதிக்கு சென்றாலும்,        மற்ற […]

Continue Reading

உடைந்தழுத உமாதேவி!

கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப் பூர்வமானதாக்கியிருப்பார். “அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க […]

Continue Reading

பத்மாவதி படும் பாடு!

வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை மையப்படுத்தி கதை இருந்தாலோ அந்த படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் படாதபாடு பட்டுப் போகிறார்கள் இப்போதெல்லாம். ஒரு வசனத்தைக் கூட சுதந்திரமாக படத்தில் வைப்பதற்குப்  பல தடைகள் இருக்கிறது இங்கே. இதே தொல்லை தான் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள “பத்மாவதி” திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். […]

Continue Reading

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று – யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “எரும சாணி” குழுவினர். இவர்கள் தற்போது “கிளாப்போர்டு” தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” திரைப்படத்தில் […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

ஜனவரியில் மக்களை சந்திக்கும் அனுஷ்கா!

பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆதி பினிசெட்டி மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மிரட்டும் க்ரைம் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜி.அசோக். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ண ரெட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். எஸ்.தமன் இசையமைக்க, […]

Continue Reading