பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

கூத்தப்பாடி கிராமத்தில் வசிக்கும் உதயநிதி ஸ்டாலின், வேலை ஏதும் செய்யாமல், தன் ஊருக்கு நல்லது செய்துக் கொண்டு, தேவையான வசதிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபன் ஒரு புகழ்ச்சிப் பிரியர். அவரது தங்கையை கல்யாணம் செய்துகொண்டவரின் ஊருக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருப்பதைப் பார்க்கும் உதயநிதி, தன் ஊருக்கும் அதுபோன்ற வசதிகள் வேண்டுமென்பதற்காக பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், உதயநிதிக்கு நல்ல பெயர் கிடைப்பதால், கடுப்பாகும் பார்த்திபன், அவரின் காதலுக்கு எதிராகச் […]

Continue Reading

சதுர அடி 3500 – விமர்சனம்

வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர். கட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த […]

Continue Reading

கூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்

மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய அதிகம் பேசுவார்கள். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அப்படி மிடில் பெஞ்ச் மாணவனாக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார். இவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா ஆனந்தை காதலிக்கிறார். தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்தும் அசோக் […]

Continue Reading

விக்ரம் வேதா – விமர்சனம்

மாதவன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. குறிப்பாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இவர் சென்னையில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் விஜய்சேதுபதியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், விஜய் சேதுபதியோ தானாகவே வந்து சரணடைகிறார். விசாரணையில் மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார் விஜய் சேதுபதி. அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் மாதவன், விஜய் சேதுபதியை […]

Continue Reading

எந்த நேரத்திலும் – விமர்சனம்

நாயகன் ராம கிருஷ்ணன் ஊட்டியில் தன் அப்பா, மற்றும் அக்கா சான்ட்ரா எமி, மாமா யஷ்மித், இவர்களின் குழந்தை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் நாயகி லீமா பாபுவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டு, காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னுடைய காதல் விஷயத்தை அக்கா சான்ட்ரா எமியிடம் சொல்லுகிறார் ராம கிருஷ்ணன். இவரின் காதலுக்கு ஓ.கே சொன்ன சான்ட்ரா எமி, பின்னர் லீமா பாபுவை பார்த்தவுடன் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் சான்ட்ராவின் […]

Continue Reading

அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

அப்பாவி கதாநாயகனான உமாபதி ஒரு கிதார் கலைஞர். இவர், பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற, தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனால் மட்டுமே முடியும் என்று எண்ணுகிறார். அவருடைய உதவியை நாடுகிறார். ஆனால் உண்மையில் பயந்தாங்கொள்ளியான கருணாகரன், கதாநாயகனான உமாபதியின் பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை. தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி தனது கதாபாத்திரத்திற்கு […]

Continue Reading

வனமகன் – விமர்சனம்

பணக்கார பெண்ணான கதாநாயகி சாயிஷா, தன்னுடைய தந்தை இறப்பிற்கு பின் தந்தையின் நண்பரான பிரகாஷ் ராஜ் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருமுறை அந்தமான் தீவிற்கு தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார் சாயிஷா. சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் காட்டுவாசியான கதாநாயகன் ஜெயம் ரவி சிக்குகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட, அங்கு ஜெயம் ரவி செய்த அட்டகாசத்தால் மருத்துவமனை நிர்வாகம் கதாநாயகியின் வீட்டிற்கே […]

Continue Reading

சத்ரியன் – விமர்சனம்

திருச்சியில் தாதாவாக இருக்கும் சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சி மாநகரத்தையே ஆட்டிப்படைக்கிறார். தாதாவாக சரத் லோகிதஸ்வா இருந்தாலும், மகன் சவுந்தரராஜாவுக்கு, மகள் மஞ்சிமா மோகனுக்கும் அன்பான தந்தையாக இருக்கிறார். இதில் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி. ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் […]

Continue Reading

ரங்கூன் – விமர்சனம்

பர்மாவின் ரங்கூனிலிருந்து தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சென்னை வருகிறார் நாயகன் கவுதம் கார்த்திக். மூவரும் சென்னையில் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள். கவுதமின் வேலை சித்திக்குக்கு பிடித்துப் போகிறது. ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளுக்கும், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும் போது கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீதான சித்திக்கின் பாசம் அதிகமாகிறது. இன்னொரு புறம் கவுதமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத நாயகி சானா, அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, […]

Continue Reading

முன்னோடி – விமர்சனம்

வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் நாயகன் ஹரிஷ், உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றுவதால், அவருடனேயே இருந்து அடியாள் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவியான நாயகி யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழுகிறார். இதற்கிடையில், தாதா அர்ஜுனாவின் மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும் பிரிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷ், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். இதனால், தாதாவை விட்டும் விலகும் […]

Continue Reading