“60 வயது மாநிறம்” – விமர்சனம்!!

“எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் ஒளிந்திருக்கும்.. அவை நமக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.. நாம் அந்த இரண்டில் எந்த நாய்க்கு அதிகமாக உணவளிக்கிறாயோ, அந்த நாய் வென்று நீயாக மாறும்”.. “நீ ஒரு விசயத்தை உண்மையாக நேசித்தால், அந்த விசயம் கிடைக்கிற வரை உறுதியாக போராட வேண்டும்” “பெற்றவர்களோ, மற்றவர்களோ சக மனிதனிடத்தில் அன்பு செய்வதே மனித அடையாளம்”.. போன்றவற்றை அழகான கவிதை போல சொல்லி இருக்கும் படம் தான் […]

Continue Reading

இமைக்கா நொடிகள் விமர்சனம்

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார். இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் […]

Continue Reading

மேற்குத் தொடர்ச்சி மலை – சிறப்பு விமர்சனம்!

எல்லாத் திரைப்படங்களையும் பத்திரிக்கையாளர் பார்வையில் இருந்து அணுகத் தேவையில்லை என்கிற சுய முடிவோடு, இந்த “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்கான விமர்சனத்தை எழுதுகிறேன். எனக்கொரு ஆசை.. இந்த தமிழ் சினிமா நீண்ட நாட்களாக புனிதமாக பிம்பப் படுத்தி வருகிற “விவசாயம்” என்பதின் போலித் தனத்தை உடைத்து.. அதனுள் இருக்கிற உழைக்கும் மக்களின் வலியையும்.. வேதனையையும்.. ஏமாற்றத்தையும்.. உழைப்புச் சுரண்டலையும் பதிவு செய்ய வேண்டும் என்று.. நேற்று, #மேற்குத்_தொடர்ச்சி_மலை படம் பார்த்து முடித்த பிறகு.. அந்த மலைக்காடுகள் முழுவதும் […]

Continue Reading

விஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்!!

முதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த கலைஞனுக்கு வாழ்த்துகள். இத்தனை வயதில் இப்படி ஒரு படத்தில் துடிப்புடன் நடிப்பது என்பது எல்லோராலும் முடிந்து விடுகிற காரியமில்லை. தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துப் போவதற்கான முயற்சியில் கமல் எப்போதுமே, இங்கிருப்பவர்களில் ஒரு முன்னோடி தான் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தொழிற்நுட்பம் ஆகட்டும், திரைமொழி ஆகட்டும் இரண்டிலுமே ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரான சினிமாவாக ஈடு கொடுத்திருக்கிறது இந்த “விஸ்வரூபம் 2”. முந்தைய பாதியில் தாலிபன் தீவிரவாதி முல்லா […]

Continue Reading

“கஜினிகாந்த்” – விமர்சனம்!!

ஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில்” இரண்டு படங்கள் வசூலைக் கொடுத்திருந்தாலும், அவர் மீது ஒரு முத்திரை விழுந்திருந்தது. இப்படி இரண்டு பேருக்குமே இருக்கிற நெருக்கடியை போக்கி இருக்கிறதா இந்த “கஜினிகாந்த்”?.. வாங்க பார்க்கலாம்… தீவிர ரஜினி ரசிகரான நரேன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் “தர்மத்தின் தலைவன்” படத்திற்குப் போகிறேன். அங்கே திடிரென அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுக்க, தியேட்டரிலேயே ஆர்யா […]

Continue Reading

“ஜுங்கா” – விமர்சனம்!!

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், பார்த்துக் கொண்டே இருக்கலாம். விஜய் சேதுபதி – கோகுல் காம்பினேஷனின் அமளிதுமளி தான், தமிழ் சினிமாவின் ஆல்டைம் ஃபேவரைட்டாக மகுடம் சூடிக்கொள்ள காரணமாய் அமைந்தது. அதனால்தானோ என்னவோ, “ஜுங்கா” ஆரம்பித்ததில் இருந்தே பயங்கரமான எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை “ஜுங்கா” நிறைவேற்றி இருக்கிறதா?? படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே “ஜுங்கா” என்கௌண்டர் செய்வதற்காக கூட்டிச் செல்லப்படுகிறான். என்கௌண்டர் செய்யப்படும் அளவிற்கு ஜுங்கா செய்த குற்றம் என்ன? […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம். ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது. ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி […]

Continue Reading

அகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்!!

  கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது “தமிழ்ப்படம்” வெளியாகி. அப்போதைய டிரெண்டிற்கு சிவா – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் வந்த அந்தப் படம் இருக்கிற அத்தனை தமிழ் சினிமா ஃபார்முலாக்களையும் கிழித்துத் தொங்கவிட்டது. மாஸ் ஹீரோ முதல் காமெடி ஆக்டர் வரை அத்தனை பேரையும் உறித்து உப்பு தடவினார்கள் அந்தப் படத்தில். முழுக்க முழுக்க “ஸ்பூஃப் ஜானர்” வகையிலான அந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததால் சிலிர்த்துப் போய் சில்லரைகளை வீசி எறிந்தார்கள். நூற்றாண்டு கால […]

Continue Reading

டிக்..டிக்..டிக் – விமர்சனம்!!

முதலில் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுக்கு பெரிய வாழ்த்துக்களும், பாராட்டுகளும். “நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை”, “மிருதன்” என வரிசையாக வெரைட்டி சினிமா ரசிகர்களுக்கு தீனி போட்டவர், இந்த முறை “டிக்..டிக்..டிக்” திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களை விண்வெளிக்குக் கூட்டிப் போயிருக்கிறார். இதற்கு முந்தைய இவரின் படத்திலிருந்து விலகி இன்னும் பிரம்மாண்டம் கூட்டி, ஒரு மாபெரும் விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார். சுமார் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விண்கல் ஒன்று ஆகாயத்திலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதை இந்திய […]

Continue Reading

ஆந்திரா மெஸ் – விமர்சனம்!!

“கமெர்ஷியல்.. மாஸ்.. ஹிட்.. வியாபாரம்.. பாக்ஸ் ஆபிஸ்” என்று எதை எதையோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் போதாத காலம் இது. இந்த ஃபார்முலாக்களில் சிக்கிக் கொண்டு பல நல்ல இயக்குநர்கள் கூட தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்த “ஃபார்முலா சினிமா” வரைமுறைகளை உடைத்துக் கொண்டு அவ்வப்போது சில இயக்குநர்கள் நம்மை இயன்றளவிற்கு ஆச்சர்யப்படுத்தும் வகையில் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி தைரியமாக முடிவெடுத்து, வித்தியாசமான முயற்சியோடு ரசிகனை நம்பி வரும் ஒரு சில இயக்குநர்களை […]

Continue Reading