இலை – விமர்சனம்

பெண்களை படிக்க வைக்க விரும்பாத திருநெல்லி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகி சுவாதி நாராயணன். ஆனால், சுவாதி நாராயணனுக்கோ நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ விருப்பமில்லை. இந்நிலையில், சுவாதி நாராயணனுக்கு கடைசி தேர்வு எழுதும் நேரத்தில் பல தடைகள் வருகிறது. தடைகள் அனைத்தையும் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை. இலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி […]

Continue Reading

ப.பாண்டி – விமர்சனம்

பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும். சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு […]

Continue Reading

சின்ன கபாலியுடன் ஆட்டம் போடும் ரஹீம் பாய்! சிவலிங்கா – விமர்சனம்

  சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, காஞ்சனாவின் இயக்குநர் மற்றும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி என்றால் இயல்பாக எதிர்பார்ப்புகள் எகிறும் தான். அப்படி இயல்பாகவே சிவலிங்கா படத்திற்கு எதிர்பார்ப்பு அமைந்தது என்றால் பி.வாசுவும் ராகவா லாரன்சும் ரசிகர்களை திருப்திபடுத்தியும் அனுப்புவார்கள் என்பது மகிழ்வான ஒன்று. பாடல்கள், காமெடி, பேய், கிராபிக்ஸ் என சிவலிங்காவில் குடும்பங்களையும் குழந்தைகளையும் அம்சங்கள் சிறப்பாக வந்திருக்கிறது. சந்திரமுகி, முனி, காஞ்சனா வகையறா பேய் மசாலா படம் தான். பேய் பழிவாங்க அலையும் […]

Continue Reading

காற்று வெளியிடை – விமர்சனம்

காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது. இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் […]

Continue Reading

கவண் – விமர்சனம்

விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகின்றனர். படிப்பை முடிக்கும் தருவாயில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார். அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து […]

Continue Reading

டோரா – விமர்சனம்

நயன்தாராவும், அவரது தந்தை தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இதற்காக பழைய காரை வாங்க சென்ற இடத்தில், ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார். அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அந்த காரில் வாடிக்கையாளர் ஒருவர் கொடைக்கானலுக்கு செல்லுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை […]

Continue Reading

எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

நட்ராஜும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஓவியம் வரைவதில் வல்லவர்கள். இதில் நட்ராஜ், ரஜினி ரசிகர். ராஜாஜி, கமல் ரசிகர். ரஜினி-கமல் படங்கள் வெளியாகும் போது இருவரும் கட்-அவுட் வரைந்து தியேட்டரில் வைத்து கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அப்போது ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலால் அரசியல் வாதியாக இருக்கும் ராதாரவியின் தியேட்டர் பலிகாடா மாறுகிறது. இதை தடுப்பதற்காக தன்னுடைய அடியாளான விஜய் முருகனை வைத்து சூழ்ச்சி செய்து வருகிறார். இதற்கிடையில் நட்ராஜும், ராஜாஜியும் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் இருவரும் […]

Continue Reading

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா. மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே. நியமிக்கப்படுகிறார். கொலைக்கான விசாரணையில் தீவிரமாக களமிறங்கும் ஆர்.கே.வுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. […]

Continue Reading

கடுகு – விமர்சனம்

  தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருக்கும் பரத், அந்த ஊரில் தன்னால் முடிந்த பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இவருக்கென்று தனி மரியாதை அந்த ஊரில் உள்ளது. பலரும் போற்றும் படி நடந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ். இவருடன் ராஜகுமாரானையும் சமையல்காரராக அழைத்து வருகிறார். மிகவும் இரக்கம் குணம் கொண்ட ராஜகுமாரன் தன்னால் முடிந்த சிலருக்கு உதவி செய்து வருகிறார். இப்படி செய்யும் உதவியால் அந்த ஊரில் ஆசிரியராக இருக்கும் […]

Continue Reading

புரூஸ் லீ – விமர்சனம்

ஜெமினி கணேசன் என்கிற ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்தாங்கோழி. இவரது பயத்தை போக்கவே சிறுவயதிலேயே ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்து விடுகிறார்கள். ஜி.வி.யின் நண்பன் பால சரவணன். ஜி.வி.பிரகாஷின் காதலி கீர்த்தியையும், பால சரவணன் காதலி என நான்கு பேரும் ஒன்றாக சுற்றி வருகிறார்கள். ஒருநாள் மெரினா பீச்சில் கிடைக்கும் கேமராவால், லோக்கல் தாதாவாக இருக்கும் ராமதாஸ் அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்வதை ஜி.வி.பிரகாஷ் படம் பிடித்து விடுகிறார். இந்த புகைப்படத்தை வைத்து தாதா ராமதாசை […]

Continue Reading