மார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜன், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர், ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது நட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ‘காட் பாதர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்து வருகிறது. ‘காட் பாதர்’ […]

Continue Reading

தயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான படம் `தமிழ் படம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் […]

Continue Reading

விக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்ஸ்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது சாமி படத்தின் […]

Continue Reading

அல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் […]

Continue Reading

ஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே!!

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் “Grass Root Film Company” நிறுவனமும் “20th Century Fox” நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் “அண்ணனுக்கு ஜே”. தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், “அட்டக்கத்தி” தினேஷ் கதாநாயகானாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் கதா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – […]

Continue Reading

எந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்

ரஜினிகாந்த் நடிப்பில் ‌சங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் […]

Continue Reading

விதார்த்துடன் ஜோடி சேரும் அங்கமாலி டைரீஸ் நடிகை

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரத்தில், […]

Continue Reading

சீமராஜா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!!

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள “சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான “24ஏ.எம்.ஸ்டூடியோஸ்” டுவிட்டரில் தகவலை பகிர்ந்திருக்கிறார்கள். கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு […]

Continue Reading

நயன்தாராவின் அடுத்த படத்திலும் யோகிபாபு

தனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார். இவரும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா’ படத்தின் `கல்யாண வயசு’ எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. நயன்தாராவை யோகி பாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த […]

Continue Reading

சமூக செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் “குப்பத்து ராஜா” தயாரிப்பாளர்!

சென்னை கடற்பகுதிகளில் 60% பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. அது மீன்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது” என்கிறார் குப்பத்து ராஜா படத்தின் தயாரிப்பாளர் சரவணன். “நடிகர் ஜி.வி.பிரகாஷ், பல சமூக நடவடிக்கைகளில் தலைமை தாங்கி நடத்தி வருவதோடு,தலைசிறந்த சமூகத்தின் நலனில் அக்கறை உடைய நடிகராக பெயரை பெற்று வருகிறார். சமூக செயல்கள் செய்யும் அவரது நல்ல பழக்கமும், வழக்கமும் அவரது தயாரிப்பாளர்களையும் பின்பற்ற வைத்திருக்கிறது. அவரது ஹீரோவின் பாத சுவடுகளை பின்பற்றி சமூக செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “குப்பத்து […]

Continue Reading