அஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்

அஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் […]

Continue Reading

பிரபுதேவா-வை வீழ்த்திய நயன்தாரா!!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகர் பிரபுதேவாவும், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் ஒரு காலத்தில் “ரிலேஷன்சிப்”-இல் இருந்தவர்கள். இவர்கள் அன்பு பாராட்டிய விதம், திருமணம் வரை போனது. ஏனோ, எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் நாகரீகமாக பிரிந்தார்கள்.   இது நடந்து சில வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில், இப்போது இருவரும் அவரவர் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்திருக்கும் […]

Continue Reading

சர்காரை எச்சரித்த சுகாதாரத்துறை

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது […]

Continue Reading

மலேசிய கேங்க்-களின் கருப்பு பக்கங்களைச் சொல்லும் “வெடிகுண்டு பசங்க”!!

சமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். விமலா பெருமாள் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா […]

Continue Reading

பெற்றோர் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜய்

தமிழ்ப்பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை டைரக்டு செய்து வருகிறார். விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து […]

Continue Reading

நட்புக்காக ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் ரகுல் ப்ரீத்

தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]

Continue Reading

கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையைப் படமாக்கும் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கவிருக்கிறார். ’திரைக்கதை உருவாக்க பணிகள் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னர் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், படத்தின் பெயர் முடிவு செய்யப்படும். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும்’ என்று கூறி இருக்கும் அவர், அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்கப் போகிறார். இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி […]

Continue Reading

சிம்புவின் அதிரடி ஆரம்பம்!!

புதிய பாய்ச்சலோடு புறப்பட்டிருக்கிறார் சிம்பு. அடுக்கடுக்கான புகார்களையும் தாண்டி வெற்றி கரமாக மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் மற்றும் பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் சிம்புவிற்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சூட்டோடு சூடாக வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. “வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் சுரேஷ் காமாட்சி […]

Continue Reading

த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா […]

Continue Reading

பிரபல நடிகரின் மகனுடன் ஜோடி சேர்ந்த மேகா

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட […]

Continue Reading