நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இனி ஊடகங்கள் முன்பே நிற்கபோவதில்லை – விஷால்.

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால். நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் […]

Continue Reading

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்குகிறார் விஜய் மில்டன்!

கொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் பிரபல ஃபைனான்சியர் கமல் போரா இணைந்து “இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்” என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள்.  அவர்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும்,  நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் […]

Continue Reading

சர்வம் தாளமயம் சர்வதேச பனோரமா பிரிவில் ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

  இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது.

Continue Reading

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் […]

Continue Reading

நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். இந்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன விஷயங்களால் […]

Continue Reading

900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

வணக்கம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார். பாண்டவர் […]

Continue Reading

‘வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை..!

தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார்.. இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன். சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. […]

Continue Reading