Actor Mohan Fans Meet

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு 1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட […]

Continue Reading

ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

    பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020, சனிக்கிழமை அன்று ‘கோர்ட்யார்ட்’, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னையில் நடைபெறுகிறது ‘மடை திறந்து’ என்பது ‘NOISE AND GRAINS’ நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற […]

Continue Reading

மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

புதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது. பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படம் வெளியான இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர். இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு […]

Continue Reading

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

    தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு     நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது […]

Continue Reading

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

  ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ – நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி   கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் […]

Continue Reading

” தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.

    ” தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு. பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை […]

Continue Reading

மீண்டும் வெயிட்டாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி

மீண்டும் வெயிட்டாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி! அடுத்தடுத்து மூன்று படம்.. அதிரடியாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி! 2 ஆக்ஷன், 1 மியூசிக்கல் திரில்லர் – அதிரடியாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி! போடா போடி தயாரிப்பாளர் பதம் குமார் கிட்டத்தட்ட 9 வருட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக மீண்டும் கால் பதிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. […]

Continue Reading

இறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் !

  திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.   படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க […]

Continue Reading

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

திருடன் போலீஸ், உள்குத்து  படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது.  ரெஜினா கஸண்ட்ரா  முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்  தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா […]

Continue Reading

அகரம் புத்தக வெளியீட்டு விழா

  சென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா இன்று(5/1/2020)நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள். பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ‘உலகம் பிறந்தது நமக்காக’ எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு தமிழக பள்ளிக்     கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது : “இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, மாணவர்  திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்கல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை திரு.சூ     ர்யா “அகரம் அறக்கட்டளை”மூலம் செயல்படுத்துவது அவரது மனித நேயத்தை காண்பக்கின்றது.கல்வி நிகழ்வான இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அரசு அமைக்கவிருக்கும் புதிய திட்டங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்இனி3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள  மாணவர்கள்  சரலமாக     ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்12வகுப்புபடிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும்”என்று கூறினார்.”.பொதுவாக மாணவர்களை நீதிக் கதைகள் படி என்றால், அது பெரியவர்களுக்கானது என்று எண்ணுவார்கள். பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ நூல் மாணவர்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதப்படுள்ளது. மாணவர்களை அவர்களுக்குரிய நிறை குறைகளோடு சேர்த்து பரிவோடு அணுக வேண்டும் என பெரியவர்களுக்கும் எடுத்துச் சொல்கிற   து.  பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் சக மனிதர்களை பாகுபாடின்றி நேசிக்கும் எளிய மக்களுக்காகவும், வகுப்பறைகளை அன்பின் மையங்களாக்கும் ஆசிரியர்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.’உலகம் பிறந்தது நமக்காக’ நூல் அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அகரம் எடுக்கும் முயற்சிகள், கல்வியை வழங்குவதோடு இல்லாமல் சமூகத்திற்கான எதிர்கால தலைமுறையினரை உருவாக்கிட அகரம் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்கிறது. அகரம் சமூகத்திற்கான கூட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது. பத்தாண்டுகளாக பரிசோதித்துப்பார்த்த வெற்றிக்கான நடை   முறைகளை பதிவு செய்திருக்கிறார்கள் அதை ஒவ்வொருவரும் எடுத்துச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதில் வெளிப்படுகிறது. மாணவர்கள் நம்பிக்கையுடன் பயின்றால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்வி சாமானியர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் என்பதற்கான உதாரணங்கள் இந்தப்புத்தகங்களின் வாயிலாக வெளிப்படுகிறது.     அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது : “அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கல்வி குறித்த ஒரு நிகழ்வு என்றதும் உடனே கலந்துக்கொள்வதாக சொல்லி இன்று இந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்து இந்த விழாவை சிறப்பித்த மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன்அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கு அகரம் அறக்கட்டளை “இணை” எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.இதற்கான முயற்சிக்கு அரசு பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய மாண்புமிகு தமிழக பள்   ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அகரம் அறக்கட்டளை சார்பான எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மை வாய்ந்தது, அகரம் இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.எந்த ஒரு சூழ் நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்க்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது.“அகரம்” மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்நாம் அனைவரும் தான் “அகரம்”.” என்று கூறினார்     அறநெறிகளை எடுத்துச் சொல்லும் வகையில்  ஒவ்வொரு மாதமும் உதாரணக் கதைகளோடு ‘யாதும்’ மாத இதழில் பேராசியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ வித்தியாசம்தான் அழகு’. பெரும் எண்ணிக்கையிலானவர்களை புத்தகம் வாசிப்பாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது பேராசிரியர் மாடசாமி அய்யா அவர்களின் எழுத்தும் சிந்தனையும். அதை புத்தகமாக பதிப்பிப்பதில் அகரம் பெருமை கொள்கிறது.இன்றும் கிராமங்களின் எளிய மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை அரசுப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களுமே. பன்னிரெண்டாவது வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்து வெளிவரும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் பெரிய இடைவெளி இருக்கிறது. பொருளாதார, சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற இயலாத  நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதே அகரம் அறக்கட்டளையின் பணி.தொடர்ச்சியாக மாணவர்களோடு பயணிக்கையில் நம்பிக்கை என்பது  மா   ணவர்களிடையே பெருமளவில் குறைந்து கொண்ட வருகிறது என்பதை அறியமுடிந்தது. எனவே மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திட , அதே போன்ற சூழ்நிலையை கடந்து வந்த மாணவர்கள் தங்கள் அனுபவப் பகிர்வுகளை பதிவு செய்து, தாங்கள் வெற்றி அடைந்த காரணிகளை கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரைகளில்  அவர்களை உருவாக்கிட அகரம் கைக்கொண்ட வழிமுறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.  இதே உத்வேகம்தான் அகரம் க     ல்வி தொடர்பான புத்தகங்களை பதிப்பித்து வெளியிட  உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.நிகழ்வில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச. மாடசாமி, ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ், சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன், திரு. ஜெயச்சந்திரன், திருமதி.மா. லைலாவதி, பேராசிரியர் ராஜு, பேராசிரியர் பாரதி பாலன்  மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தன்னார்வலர் பாலகுமார் மற்றும் அகரம் முன்னாள் மாணவர் பிரதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  

Continue Reading