பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று […]

Continue Reading

கொரோனாவிலிருந்து குணமடைந்த ராஜமவுலி

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலி தனது குடும்பத்தினருடன் […]

Continue Reading

சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு?

நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது. இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் […]

Continue Reading

பிரபல பாலிவுட் நடிகர் நுரையீரல் புற்று நோயால் பாதிப்பு

கடந்த 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில், சஞ்செய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்செய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்செய் […]

Continue Reading

உடல் நலக் குறைவால் பிரபல பட தயாரிப்பாளர் வி சாமிநாதன் மரணம்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான V. சாமிநாதன்(67) அவர்கள் இன்று (திங்ககிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, […]

Continue Reading

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த […]

Continue Reading

தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்த நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது என்றார்.

Continue Reading

இயக்குநர் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு-குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

உடல் நலக் குறைவால் பிரபல நடிகர் அனில் முரளி மரணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. சின்னத்திரையில் பணியாற்றிய அவர், பின்னர் 1993-ம் ஆண்டு வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ஏராளமான மலையாள படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அனில் முரளி, மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 6 கேண்டில்ஸ், நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, கணிதன், […]

Continue Reading

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ” சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான […]

Continue Reading